முதலை தாக்கி பெண் பலி!

கொக்கட்டிசோலை களப்பு பகுதியில் விறகு தேடிச் சென்ற பெண் ஒருவர், முதலை தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவத்தில் 27 வயதுடைய பெண் நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments