றிசாத் பதியுதீன் மாலை நாடு திரும்பினார்

உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ஜெனீவா சென்றிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று மாலை நாடு திரும்பினார்.

5 நாள் இந்த பயணத்தில் பிரான்ஸின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 26 வது ஆண்டு நிறைவு நினைவு தின நிகழ்வுகளிம் கலந்து கொண்ட அமைச்சர்,ஜரோப்பி நாட்டுக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பணிகளையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்..

இதனையடுத்து ஜெனீவாவில் இடம் பெற்ற சர்வதேச வர்த்தக மாநாட்டின் இலங்கையின் சார்பில் பிரதம உரையினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியதுடன்,அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாட்டு அமைச்சர்கள் மற்றும் வர்த்தக சமூகங்களின் பிரதி நிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதே வேளை ஜெனீவாவுக்கான சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான பணிப்பாளர் வின்சன்ட் சுபல்லாவை சந்தித்து இலங்கைக்கும் சுவிட்ஸ்லாந்து நாட்டிற்கும் இடையில் வர்த்தக மேம்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில் சுவிட்ஸ்லாந்துக்கான இலங்கை துாதுவர் ஆர்டி.எஸ்.குமாரரத்ன,உலக வர்த்தக அமைப்பின் தொடர்பு அதிகாரி இஸ்ஸதுல் றஹ்மான்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சுவீஸ் நாட்டின் அமைப்பாளர் முஹைஸ் வஹாப்தீன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

Comments