கிழக்குப் பல்கலைக்கழகத்தின் செய்தி!
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் செய்தி!
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2015/2016ம் கல்வியாண்டுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள முதலாம் வருட மருத்துவ மாணவர்களுக்கான விரிவுரைகள் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் 16.11.2016ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைகழக பதிவாளர் வி.காண்டிபன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்கள் எதிர்வரும் 15.11.2016 அன்று, 50, புதிய வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் தமது பதிவுகளை காலை 09.00 மணிமுதல் மேற்கொள்ளலாம்.
அன்றைய தினம் பதிவுகளுக்கு பின்னர் விடுதி வசதிகளுக்கு உரித்துடைய மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு பீடத்தின் உதவிப் பதிவாளருடன் 065-2227025 எனும் தொலைபேசி இலக்கத்திலோ அல்லது உதவிப் பதிவாளர்/மாணவர் நலன்புரிச்சேவைகளுடன் 065-2240731 எனும் தொலைபேசி இலக்கத்திலோ தொடர்பு கொள்ள முடியுமென என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment