வகைப்படுத்திய கழிவுகள் சேகரிப்பு – ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு
வகைப்படுத்தலின் ஊடாக மாத்திரம் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பமானது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேளைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் விரைவில் உக்கிப்போகும் மற்றும் உக்கிப்போகாதவை என வகைப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகள் ஜனாதிபதியினால் நகரசபைகளிடம் வழங்கப்பட்டன.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (01.11.2016) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இங்கு உரையாற்றுகையில்.
சுத்தமான நாட்டை கட்டியெழுப்ப இந்த வேலைத்திட்டம் உதவும். கழிவு முகாமைத்துவத்திற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக அமுல்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்தார்.
இன்று முதல் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் குப்பைகளை வகைப்படுத்தி அகற்றுவதற்காக தயார் செய்யப்பட வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
கடந்த மாதம் இடம்பெற்ற மாநகர சபைகளினதும் ஆணையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய உக்கக்கூடியன, உக்காத, பிளாஸ்டிக் கண்ணாடி ஆகிய மூன்று வகைகளாக, குப்பைகள் வகைப்படுத்தப்பட்டு அவற்றை சேகரிப்பதற்காக தயார் நிலையில் வைக்க வேண்டுமென அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment