முல்லைத்தீவில் ”செமட்ட செவண” வேலைத்திட்டம் - சஜித் பிரேமதாசாவுடன் மஸ்தான் எம். பி

> முல்லைத்தீவில் ”செமட்ட செவண”  வேலைத்திட்டம் -  சஜித் பிரேமதாசாவுடன் மஸ்தான் எம். பி
>
> ”செமட்ட செவண” எனும் ”அனைவருக்கும் நிழல்” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டு உபகரணங்கள் மற்றும் சீமெந்து வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவில் நேற்று (05.11.2016)  நடைபெற்றது.
>
> வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களும் கலந்துகொண்டார்.
>
> குறித்த நிகழ்வில் அவர் கே.காதர் மஸ்தான் அவர்கள் உரையாற்றும்போது,
>
> முல்லைத்தீவு  மாவட்டம் என்பது யுத்தாத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய வாழ்வாதாரத்தை கொண்டவர்கள் வாழும் ஒரு பகுதியாகும்.
>
> இங்குள்ளவர்கள் தங்களது உயிர் ,உடைமைகள் என்பவற்றை இழந்து இப்பொழுது என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கதியாகி இருக்கின்ற  இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு உதவித்திட்டங்கள் வந்தடைவது மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.
>
> எமது இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம  சிங்ஹ தலைமையிலான ஆட்சியின் கீழ்  இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்கள் நாட்டின் பல பாகங்களிலும்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
>
> முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச வீடைப்புத்துறையில் பல்வேறு அபிவிருத்திகளை செய்தார் என்றாலும் அவரது மரணத்திற்கு பின்னர் அவை தேங்கிக்காணப்பட்டன ஆனால் இப்பொழுது தந்தையின் அதே செயற்பாடுகளை அவரது மகன் அமைச்சர் சஜித் பிரேமதாச முன்னெடுத்து செல்கிறார் என்பது பாராட்டக்கூடிய ஒன்றாகும்.
>
> அந்த வகையில் அமைச்சர் சஜித் பிரேமதாச யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உங்களிடமுள்ள வீடமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் ,  அதேபோல இங்கு படித்த எத்தனையோ படித்த இளைஞர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் என்பவற்றையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும் என அவர் தெரிவித்தார்.
>
> இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

ihzana fareed


Comments