சவூதியில் காணாமல் போயுள்ள காத்தான்குடி இளைஞர்!

தொழில் நிமித்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்ற மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் மற்றும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இன்று முறையிடப்பட்டுள்ளது.

காத்தான்குடி – 05, மார்கட் வீதியைச் சேர்ந்த 32 வயது முஹம்மத் மஹ்றூப் முஹம்மத் ஆஷிக் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் சவூதி அரேபியா ரியாத் நகரத்தில் உள்ள தனியார் கம்பனி ஒன்றில் பணியாளராக கடமை புரிந்து வரும் வேளையில் கடந்த மாதம் 18ஆம் திகதியன்று முதல் காணாமல் போயுள்ளார்.

இவரைப் பற்றி தகவலறிந்தால் பின்வரும் தொடர்பு இலக்கங்களுக்கு அறியத்தருமாறு அவரின் குடும்பத்தினர் வேண்டிக் கொள்கின்றனர்.

முஹம்மத் றமீஸ் – 0096 552244041

முஹம்மத் ஜௌபர் – 0094 776011399

முஹம்மத் சிராஜுதீன்– 0094 776167935

Comments