மஹிந்த சீனாவுக்கு சென்றது சீனாவுக்கு தெரியாதாம்!
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கான பயணம் மேற்கொண்டுள்ளார்.எனினும் மஹிந்த மேற்கொண்டுள்ள பயணம் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென சீன வெளிவிவகார அமைச்சுதெரிவித்துள்ளது.
23ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச சீனாவுக்குப் புறப்படமுன்னர், அவரது செயலகம் வெளியிட்ட அறிக்கையில்,
சீன அரசின் அழைப்பின் பேரிலேயே பீஜிங் செல்வதாகவும், வரும் 28ஆம் நாள்சீன அரச தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
எனினும் பீஜிங்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஜெயங் சுவாங்கிடம்,
மஹிந்த ராஜபக்ச சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பயணத்தில் சீனா எதனை எதிர்பார்க்கிறது?என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் அதற்கு பதிலளித்த அவர், அதுபற்றிநான் அறியவில்லை. இதுகுறித்து விசாரித்து விட்டு பின்னர் தகவல் கூறுகிறேன் என்றார்.

Comments
Post a Comment