இருபது இலட்சம் ரூபாய் பெருமதியான போலியான காசோலையை வழங்கிய நபர் விளக்கமறியலில்

மன்னாரைச் சேந்த நபர் ஒருவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இருபது இலட்சம் ரூபாய் பெருமதியான படகு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக போலியான காசோலையை வழங்கிய சந்தேக நபரை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று புதன்கிழமை (2) உத்தரவிட்டார்.

புதியமூர் வீதி,மன்னார் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்திலுள்ள நபர் ஒருவரிடம் படகு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக வேண்டி மோசடியான காசோலையினை வழங்கி விட்டு குறித்த சந்தேக நபர் படகினை எடுத்துச்சொன்றுள்ளார்.

படகு உரிமையாளர் குறித்த திகதிக்கு காசோலையினை மாற்றுவதற்கு முற்பட்ட போதே போலியான காசோலை என தெரிய வந்ததையடுத்து திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை செவ்வாய்கிழமை(1) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை இன்று

Comments