சிக்னீஸ் விருது வழங்கல் விழா ஜனாதிபதி தலைமையில்
கலைஞர்களின் நலனுக்காக தேசிய நிதியமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சிக்னிஸ் கௌரவிப்பு – 2016 திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்வில் நேற்று (12) பிற்பகல் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திரைப்படத்தினூடாக நாட்டின் பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் கலைஞர்களின் நலன்களுக்குப் பொறுப்பான துறைகளால் கவனம் செலுத்தப்படுவதில்லை என தெரியவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த நிதியம் நிறுவப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் 2015ஆம் ஆண்டின் சிறந்த நடிகராகத் தெரிவு செய்யப்பட்ட ‘ஓப நெத்துவ ஓப எக்க’ திரைப்படத்தின் ஷியாம் பெர்ணாந்துவும் சிறந்த நடிகையாக ‘பொரதிய பொக்குண’ திரைப்படத்தின் கௌசல்யா பெர்ணாந்து மற்றும் சிறந்த இயக்குனராக ‘கோ நானா பொக்குண’ திரைப்படத்தின் இயக்குனர் இந்திக்க பெர்ணாந்து ஆகியோர் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் அதிவணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித், அருட்தந்தை லால் புஸ்பதேவ, அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் கலைஞர்கள், பிரமுகர்களும் பங்குபற்றினர்.

Comments
Post a Comment