கந்தளாயில் ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகத்தினால் நூலகம் அமைக்க முயற்சி

  திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட ஜொலிபோயிஸ் விளையாட்டுக் கழகத்தினால் பிரதேசத்தின் அபிவிருத்தியையும்,கல்வியையும் முன்னோக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பேராறு பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றினை ஏற்படுத்தல்,மற்றும் பிரதேசத்தின் கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் நூலகம் ஒன்றினை ஏற்படுத்தல் ,போன்ற சேவைகளை மேற்கொள்ள கந்தளாய் ஜொலிபோயிஸ் விளையாட்டுக் கழகம் செயற்பட்டு வருகின்றது.

இந்த இரண்டு வசதிகளையும் ஏற்படுத்த நாற்பத்தி ஐந்து இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படவுள்ளது.குறித்த விளையாட்டுக் கழகம் அந்நிதியினை சேகரிப்பதற்காக பல்வேறு வகையிலான நலன்புரி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலொன்று தான் கடந்த வாரம் 2017 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியொன்றினை பிரமாண்டமான முறையில் வெளியீட்டு இருந்தார்கள்,இதில் கழக மூத்த உறுப்பினர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,சமூக சேவையாளர்கள், மற்றும், விளையாட்டு வீரர்கள் என அனைவரையும் அரவனைத்து நாட்காட்டியை வெளியீட்டிருந்தார்கள் அத்தோடு கல்வி சம்பந்தமான செயற்றிட்டங்கள், விளையாட்டு செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகத்தின் இந்த இரண்டு செயற்றிட்டங்களும் நிறைவேற திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச மக்கள்,சமூக சேவை நிறுவனங்கள், அனைத்தும் உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments