திருகோணமலை: வைத்தியர்கள் ஆர்பாட்டம் – ​​நோயாளர்கள் அவதி


.

h66
திருகோணமலை பொது வைத்தியசாலையில் வௌிநோயாளர் பிரிவுகள் இயங்காத நிலையில் இன்றைய தினம் நோயாளர்களுக்கு விஷர் நாய்க்கடி மற்றும் ஏப்பூசி ஏற்றுவதற்காக திகதி வழங்கப்பட்டிருந்தவர்களுக்கு விஷேடமாக சிகிச்சை இடம் பெற்று வருவதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
தூரப்பிரதேசங்களிலிருந்து வரும் நோயாளர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படடு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனாலும் வௌிநோயாளர்கள் பிரிவில் மருந்துகள் வழங்கப்படாமையினால் நோயாளிகள் வைத்தியசாலை மரத்தடியிலும் -கடைத்தெரிவிலும் அலைந்து திரிவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
(இஹ்சனா பரீத்)
h h-jpg2
.

Comments