கிண்ணியா சூரங்கல் பகுதியிலுள்ள வீடொன்றில், குளியலறையில் வழுக்கி விழுந்து, கர்ப்பிணியொருவர் உயிரிழந்துள்ளார்
(ihzana fareed)
கிண்ணியா சூரங்கல் பகுதியிலுள்ள வீடொன்றில், குளியலறையில் வழுக்கி விழுந்து, கர்ப்பிணியொருவர் உயிரிழந்துள்ளார் என, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலைஇடம்பெற்ற இச்சம்பவத்தில், கிண்ணியா சூரங்கல் சாந்தி நகர் 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நளீம் ஜனூபா என்பவரே உயிழந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது, கிண்ணியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


Comments
Post a Comment