வெளிநாடு செல்ல முடியாத நிலையில் பாராளும்னற உறுப்பினர்கள்!

2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் சற்று முன் ஆரம்பமாகியது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில், கூடிய நாடாளுமன்றம் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பின் வாக்கெடுப்பு, இம்மாதம் 25ஆம் திகதியும் அதன் பின், மூன்றாவது வாசிப்பான குழுநிலை விவாதமும், ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

இக் காலப்பகுதியில், அரசாங்கத் தரப்பு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆகியோர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சகலருக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதென அரசாங்கத் தரப்பு  தெரிவிக்கின்றன.

Comments