குச்சவெளியில் தனிக்கல்வி வலயம் ஏற்படுத்த வேண்டும் – லாஹிர்
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வலயம் புதிய தனிக் கல்வி வலயமாக மாற்றப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் விசேட சபை அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை(11) கிழக்கு மாகாண சபை கட்டிடத்தொகுதியில் தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சபை அமர்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேத்தானந்தா சில்வாவினால் அம்பாறை மாவட்டத்திற்கான கல்வி வலயங்களை உருவாக்கல் தொடர்பாக கொண்டு வந்த பிரேரணையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
கிழக்கு மாகாணத்தில் பதினேழு கல்வி வலயங்கள் இருகின்ற சூழலில் தேவைகளுக்கேற்ப வலயங்களை அதிகரிக்க வேண்டிய தேவைகள் இருக்கின்றது. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பத்தில் மூன்று வலயங்களும் பின்னராக இரண்டு வலயங்களும் ஏற்படுத்தப்பட்டு ஐந்து வலயங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை வலயத்தில் வெள்ளைமணல் தொடங்கி தென்னமரவாடி வரையான பகுதியோடும் பதவிஸ்ரீபுர வரை நீண்ட தூர வலயமாக காணப்படுகின்றமையால் நீண்ட காலங்களாக குச்சவெளி வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு அங்குள்ள மக்கள் விரும்புகின்றார்கள்.
காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய குச்சவெளி வலயத்தை தனி வலயமாக கல்வி அமைச்சர் சீ.தண்டாயுதபாணியினால் அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியதோடு வளப்பங்கீட்டினையும் புதிய முறையில் கல்வி அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.என்று இப்பகுதியின் பிரதிநிதி என்ற வகையில் வினையமான வேண்டுகோளினை விடுக்கின்றேன்.
அத்தோடு மக்களின் தேவைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது அதேபோல பிள்ளைகளின் கல்வி நிலையை கருத்திற்கொண்டு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
Comments
Post a Comment