கல்வியமைச்சரை இம்ரான் எம்.பி சந்திப்பு

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கல்வி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை  சந்தித்து திருகோணமலை மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகள் சம்மந்தமாக கலந்துரையாடினார்

இச்சந்திப்பில் கிண்ணியா மத்திய கல்லூரி திருகோணமலை ராஜகீய கல்லூரி நிர்வாகமும்  பாடசாலை அபிவிருத்தி சங்கமும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமையவே  கல்வி அமைச்சருடனான சந்திப்பில் பின்வரும் விடயங்களுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளன.

கிண்ணியா மத்திய கல்லூரியில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த Primary Learning Resource Centre க்கான கட்டிடத்தை இரண்டுமாடி கட்டிடமாக நிர்மாணித்தல்

திருகோணமலை ராஜகீய வித்தியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தந்தை முன்னால் ராஜாங்க அமைச்சர் மர்ஹூம் M.E.H. மகரூப்பினால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தின் திருத்தப்பணியை ரத்து செய்து அங்கு புதிய இரண்டுமாடி கட்டிடம் நிர்மாணித்தல் போன்ற விடயங்கள் கலந்தரையாடப்பட்டாகவும் தெரிவித்தார்.

ihzana fareed


Comments