களுத்துறை ஹீனெட்டிகல பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல்

களுத்­துறை பிர­தேச சபைக்­குட்­பட்ட ஹீனெட்டி­கல ஜும்ஆ பள்­ளி­வாசல் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணிக்கும் 1 மணிக்கும் இடையில் இனந்தெரி­யா­தோ­ரினால் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் பள்­ளி­வா­சலின் இரண்டு கண்­ணா­டிகள் சேத­மா­கி­யுள்­ளன.
களுத்­துறை பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து பொலிஸார் உட­னடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். பொருத்­தப்­ப­டா­மையால் அரு­கி­லுள்ள வர்த்­தக நிலை­யங்­களின் சி.சி.ரி.வி. கமரா பதி­வு­களைப் பெற்று பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். பள்­ளி­வா­ச­லுக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இரு பொலிஸார் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு முன்பு பள்­ளி­வா­சலில் தப்லீக் ஜமாஅத் ஒன்று தங்­கி­யி­ருந்­த­தா­கவும், அவர்­க­ளிடம் தாம் தாக்­குதல் மேற்­கொள்ளப் போவ­தா­கவும் அங்கு இருக்க வேண்­டா­மெ­னவும் இனந்­தெ­ரி­யாதோர் வந்து எச்­ச­ரித்­த­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர்கள் எச்­ச­ரித்து சென்ற சில மணித்­தி­யா­லங்­க­ளி­ன் பின்பே தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்­ற­தா­கவும் அச்­சந்­தர்ப்­பத்தில் பள்­ளி­வா­ச­லினுள் எவரும் இருக்­க­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இச் சம்­பவம் தொடர்பில் ஹீனெத்­தி­கம ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் எம். எஸ். ஹம்சா விளக்­க­ம­ளிக்­கையில்;ஹீனெட்டிகல ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்­குட்­பட்ட பகு­தியில் சுமார் 500 முஸ்லிம் குடும்­பங்கள் வசித்து வரு­கின்­றனர். களுத்­துறை பிர­தேச சபைக்­குட்­பட்ட இக் கிராமம் ஒன்­றி­லேயே முஸ்­லிம்கள் வாழ்­கி­றார்கள். சுற்­றிலும் பெரும்­பான்மை மக்­களே வாழ்­கி­றார்கள்.

சிங்­க­ள­வரும் முஸ்­லிம்­களும் மிகவும் ஒற்­று­மை­யுடன் பேதங்­க­ளின்­றியே இங்கு வாழ்­கி­றார்கள். இப்­ப­கு­தியைச் சேர்ந்த பன்­ச­லை­களின் குரு­மாரும் சம்­ப­வத்தைக் கண்­டித்­துள்­ளார்கள். எங்­க­ளுக்குள் எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை. வெளியார் எவரோ இதில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். வெளி­யி­லி­ருந்து வந்­த­வர்­க­ளா­லேயே பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என நாம் சந்­தே­கிக்­கின்றோம்.

களுத்­துறை பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள், உளவுப் பிரி­வினர் ஸ்தலத்­துக்கு வந்து விசா­ர­ணை­களை நடத்­தி­னார்கள். தொடர்ந்தும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பிரதி பொலிஸ் மா அதிபர் பள்­ளி­வா­சலின் சேதத்­துக்­குள்­ளான கண்­ணா­டி­களை அரச செலவில் மாற்றித் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.வெளி­ந­பர்கள் இரு சமூ­கங்­க­ளுக்கு இடையில் முறுகல் நிலையை உரு­வாக்­கு­வ­தற்கே இத்­தாக்­கு­தலை மேற்­கொண்­டி­ருக்­கலாம் என நாம் சந்­தே­கிக்­கிறோம் என்றார்.

Comments