சீனா பிரஜை ஒருவர் கைது!

சீனா பிரஜை ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சிகரெட்களை சட்ட விரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகபர் பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் வைத்திருந்த 800 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிகரெட்டுகள் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments