(படங்கள்) கொழும்பு நோக்கி சென்ற பஸ்மீது கல்லெறிந்து தாக்குதல்.

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட கல்முனை CTB பஸ் 10.15 மணியளவில் மட்டக்களப்பு கல்லடிக்கு அண்மித்த பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாதோரால் கல்லெறிந்து தாக்குதல் நடாத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் சாரதி எவ்வித காயங்களும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டதுடன், எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலதிக விசாரணைகளை ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
. -எஸ்.அஷ்ரப்கான்





Comments
Post a Comment