ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு அவசர வேண்டுகோள் -மஹிந்த!

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு மறைமுகமான ஆதரவு வழங்காது நேரடியாக ஆதரவினை வழங்க விரும்புகின்றவர்கள் கட்சியில் இருந்து விலகிக்கொள்ள முடியுமென  அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது…

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற  ஊடக சந்திப்பில்  இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு ஸ்ரீ.ல.சு.க. என மக்களை ஏமாற்றுபவர்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு மறைமுகமான ஆதரவு வழங்காது நேரடியாக ஆதரவினை அவர்களால் வழங்க முடியும். அது எமக்கு பிரச்சினைகள் இல்லை. மக்களை ஏமாற்றாதும், மறைமுகமாக  கட்சிக்கு ஆதரவளிக்காதும்  நேரடியாகவே இவர்களால் ஆதரவளிக்க முடியும் இதன் மூலம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தூய்மையடைய இலகுவாக இருக்கும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

Comments