புதிதாக மேலும் சில வரிகளை அறிமுகப்படுத்த யோசனை!

சீனி , உப்பு மற்றும் கொழுப்புகள் அதிகமான உணவு பொருட்களுக்கென விசேட வரி முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகள் பலவற்றில் இந்த முறை பின்பற்றப்படுவதாகவும் இதன்படி அதனை செய்ய நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அகலவத்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Comments