கந்தளாயில் இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்தவர் விளக்கமறியலில்
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) உத்தரவிட்டார்.
கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கந்தளாய் பிரதேசத்தில் உள்ள நபரிடம் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கருவாடு வியாபாரம் மேற்கொள்வதற்காக சந்தேகநபர் வாங்கியுள்ளார் பின்பு அத்தொகையில் ஐம்பதாயிரத்தை திரும்பிக் கொடுத்துள்ளார்,மிகுதி இரண்டு இலட்சத்தை பின்பு தருவதாக கூறி தலைமரைவாகியுள்ளதையடுத்து பண உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கந்தளாயில் நண்பயொருவரின் வீட்டில் வைத்து சனிக்கிழமை(12) இரவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை நேற்று (13) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment