வசீம் கொலை: விரைவில் மூவர் கைது?

மைத்ரி அரசில் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு கொலை என முடிவான ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை விவகாரத்தில் விரைவில் மூவர் கைது செய்யப்படவுள்ளதாக ‘மீண்டும்’ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களுக்கெதிரான போதியளவு சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலும் டிசம்பருக்குள் இக்கைது நடவடிக்கை இடம்பெறும் எனவும் பொலிஸ் தலைமையக தகவல் மூலத்தை ஆதாரங்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விவகாரத்தில் இரு பொலிஸ் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை சிசிடிவி பிவுகள் தெளிவாக இல்லை என கனேடிய நிபுணர்களும் கை விரித்துள்ளமையும் வசீமின் உடற்பாகங்கள் தொடர்பில் முன்னாள் அரச மருத்துவ சங்க பிரதானி மீது குற்றச்சாட்டுகள் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments