சிகரட்டை தொடர்ந்து சுருட்டுக்கும் பீடிக்கும் குறிவைக்கும் அரசு!
சிகரட் பெட்டிகள் போன்று பீடி மற்றும் சுருட்டு பெட்டிகளிலும் புகைப்பட எச்சரிக்கை குறிப்பிடப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது வரை பீடி மற்றும் சுருட்டு பெட்டிகளில் புகைப்பட எச்சரிக்கை குறிப்பிடப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபால குறிப்பிட்டிருந்தார்.
சிகரட்டிற்கு மேலதிகமாக புகையிலை உற்பத்திகளிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுவது இதன் பிரதான நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


Comments
Post a Comment