தம்புள்ளை பள்ளிவாசலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள்: பள்ளிநிர்வாகம் முறைப்பாடு
தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராக எதிர்வரும் 19ம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஆர்பாட்டத்தை நிறுத்தக்கோரி தம்புள்ளை பள்ளி நிருவாக உறுப்பினர் சலீம்டீன்; முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தம்புள்ளை பொலிஸ் நிலையத்திலே இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என அம்முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் இப்பள்ளிவாசலுக்கும் இப்பிரதேச முஸ்லிம்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறும் இல்லாவிட்டால் இனவாதத்தை வெளிப்படுத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறும் இம்முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாசல் மற்றும் இப்பிரதேச முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் மத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் ஆகியோரும் பேச்சுநடத்தியுள்ளனர்.

Comments
Post a Comment