திருகோணமலையில் பல கடைகளை உடைத்து திருடிய சந்தேக நபர்கள் இருவர் விளக்கமறியலில்

.திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல கடைகளை உடைத்து திருடியமை,மற்றும் திருட்டுப் பொருட்களை தம்வசம் வைத்திருந்தமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவரை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று செவ்வாய்கிழமை (8) உத்தரவிட்டார்.

திருகோணமலை மற்றும் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 17,மற்றும் 28 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் திருகோணமலை உப்புவெளி,அபேயபுர மற்றும் லிங்கநகர் போன்ற பகுதிகளில் கடைகளை உடைத்து பணம், இலத்திரனியல் சாதனங்கள் போன்றவற்றை குறித்த சந்தேக நபர்கள் திருடி,தம்வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்துள்ளதாக திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments