வரவு செலவுத் திட்டத்தில் சில திருத்தங்கள்!
வரவு செலவுத் திட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய வரவு செலவுத் திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு மூன்று முக்கிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றில் வழக்குத் தொடரும் போது அதற்கான கட்டணம் ஒன்றை அறவீடு செய்தல், வெளிநாடு செல்லும் நபர்களிடம் அறவீட செய்ய உத்தேசிக்கப்பட்ட கட்டணம் மற்றும் சமுர்த்தி திட்டத்தின் பெயரை மாற்றம் செய்யும் யோசனை என்பன இவ்வாறு திருத்தத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களினால் இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment