வித்யா கொலையாளிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலை வழக்கில் 9 சந்தேகத்துக்குரியவர்களுக்கு விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி வரையில் விளக்கமறியல் காலம் நீடிக்கப்ட்டள்ளது.

வித்யாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றது

இதன்போது யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேகத்திற்குரியவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் எவரையும் ஒன்றரை வருடத்திற்கு அதிகமான காலம் விளக்கமறியலில் வைக்க முடியாத நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விளக்க மறியலுக்கான சிறப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது

இந்த சிறப்பு கோரிக்கையின் அடிப்படையில், சந்தேகத்திற்குரியவர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments