Skip to main content

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்க  வாய்ப்பு வழங்குவது குறித்து ஆராய குழு

(ஆர்.ராம், எம்.எம்.மின்காஜ்)
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள தலைமையில் 20 பேர் உள்ளடங்கும் இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை நியமித்தார்.
இப்பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஏ.டீ.சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா, சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, கலாநிதி. ஹர்ஷ. டி. சில்வா, ரஞ்சன் ராமநாயக்க, கே.என்.டக்ளஸ் தேவானந்தா, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, சுனில் ஹந்துன்நெத்தி, பிமல் ரத்நாயக்க, ஜே.சீ.அலவத்துவல, எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், அரவிந்தகுமார், நாலக்க பிரசாத் கொலொன்ன, சந்திம கமகே, முஜிபுர் ரஹ்மான், ஞானமுத்து ஸ்ரீறீநேசன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்து. 

Comments