Skip to main content

தண்டப் பணத்தில் மாற்றமில்லை : நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க


வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்போவதில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
வீதி ஒழுங்கு விதிகளைப் கடைப்பிடித்தல், வீதி விதிமுறைகளுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் அதிகூடிய கவனம் செலுத்திவருகிறது. மக்களின் பாதுகாப்பே அரசாங்கத்திற்கு முக்கியமானது என தெரிவித்த அவர் குறித்த தண்டப் பணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த தண்டப் பணத்தை குறைக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நிதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை நீக்கிக் கொள்ளாவிட்டால் நாளை மறுநாள் தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Comments