திருகோணமலை: குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து முஸ்லிம்கள் வைத்தியசாலையில்

திருகோணமலை.கெமுனுபுர பகுதியில் தேசிய இளைஞர் படையணி பயிற்சி முகாம் கட்டிட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டவர்கள் ஐவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் நேற்று (05) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியவர் நிந்தவூர்.மீராநகர் பகுதியைச்சேர்ந்த எம்.நௌசாட் (33வயது) ஏ.எம்.ரம்ஷான் (25வயது) எம்.பரீஸ் (38வயது) மற்றும் கே.ஆஸிக் (32வயது ) எஸ்.ஜெலீல் (33வயது) ஆகியோரே குளவி கொட்டுக்கு இலக்காகியவர் எனவும் தெரியவருகின்றது.

கெமுனுபுர பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டிடத்திற்கருகில் குளவி கூடு தானாக கலைந்தமையினாலேயே இவ்வணர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய ஐவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments