மோட்டார் சைக்கிளில் வந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

யாழ். கோண்டாவில் பகுதியில் நேற்று இரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினரே இந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் உள்ள சிறிய கடைக்குள் புகுந்த இந்தக் குழுவினர் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலின் போது கடையில் இருந்த கண்ணாடிகளை தாக்குதல்தாரிகள் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருந்தபோதிலும் கடை உரிமையாளர் அங்கிருந்து ஓடிச்சென்று தப்பித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments