காத்தான்குடி வர்த்தகர் திருமலையில் கைது
திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் மானியத்தில் மோசடி செய்த சந்தேக நபரொருவரை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்து நேற்று (31.10.2016) திங்கட்கிழமை திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வந்த பெர்ணான்டோ முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இம்மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வர்த்தகர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியத்திற்கான 2,619,750/= ரூபாய் பெறுமதியான பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பொது சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இதேவேளை பொது சொத்துக்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் பினை வழங்க முடியாதெனவும் பினை மணுக்கோரளை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
எரிபொருள் மானியம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment