பஸ் சாரதிகளுக்கு ஆப்பு வைத்த அரசாங்கம்!
1991ம் ஆண்டு 37ம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் 40 உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ‘தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தம்) சட்ட மூலத்தை’ அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மூலம் வெளியிடப்பட்ட அனுமதிக்கப்பட்ட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்துகளை செலுத்துவோருக்கு எதிராக மாவட்ட நீதிமன்றங்களின் மூலம் தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த தண்டப்பணத் தொகையை ரூபா 10,000 முதல் ரூபா 200,000 வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.
அது தொடர்பில் விதிமுறைகள் அடங்கிய திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கே மேற்படி அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment