ஆவா குழுவின் பின்னணியில் இராணுவத்தின் முக்கியஸ்தர்கள்!

யுத்தக்காலத்திலேயே இந்த ஆவா குழு உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் இருந்த பிரபல்யமானவரின் தேவைக்கு அமைவாகவே இந்தக்குழு உருவாக்கப்பட்டது. அதற்கு இராணுவத்தின் முக்கியஸ்தர்களில் சிலரும் ஆதரவளித்தனர்  என்று சுகாதாரத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன விளக்கமளித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, ஆவா குழு எப்படி உருவானது என்பது குறித்து தெளிவுப்படுத்தினார்.

அந்தக்குழு, தமிழ் கட்சிகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. அந்தக் குழுவே வடக்கில் குழப்பங்களை தோற்றுவிப்பதற்கு தற்போது பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments