திணைக்களத்தின் பங்கு முக்கியமானது : நீதியமைச்சர்
நீதிமன்ற நடவடிக்கைகளின்போது குற்றங்கள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் வகிபாகம் முக்கியமானதாகும். நாட்டில் நீதி நியாயங்களை நிலைநாட்டுவதிலும் அத்திணைக்களத்தின் பங்கு இன்றியமையாதாகும். ஆகவே அத்திணைக்களத்தின் செயற்றிறனை மேலும் வலுவூட்டுவதற்கு 500 மில்லின் ரூபா செலவில் நவீன தொழிநுட்பங்களுடன்கூடிய டி.என்.ஏ. பரிசோதனை மற்றும் டிஜிடல் பரிசோதனை நடவடிக்கைகளை அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கவுள்ளதாக நீதி மற்றும் பௌத்த சமய அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ள ஐ.எஸ்.ஓ. மற்றும் ஐ.இ.சி தரச்சான்றிதழ்களை ஒப்படைக்கம் நிகழ்வு இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Comments
Post a Comment