தடைப்பட்ட மின்சார விநியோகம் சீரானது!

தெற்கு மற்றும் சம்பரகமுவ மாகாணங்களிலும் மேலும் பல பிரதேசங்களிலும் நேற்றிரவு மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார விநியோக கட்டமைப்பு பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை, பெலிஅத்த, மாத்தறை, தெனியாய, எம்பிலிப்பிட்டிய, குருநாகல், நுவரெலியா, மாத்தளை மற்றும் பலாங்கொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த நிலை ஏற்பட்டிருந்ததாக மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சின் செயற்திட்ட பணிப்பாளரும், ஊடக பேச்சாளருமான சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின்சார விநியோக கட்டமைப்பு பிரச்சினை காரணமாக லக்ஸபான மின் உற்பத்தி நிலையம் மற்றும் நுரைச்சோலை மின்னிலையத்தின் இரண்டாம் கட்டமைப்பு என்பன நேற்று இரவு செயலிழந்திருந்தன.

எனினும் அவை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments