சிவனொளிபாத மலையில் ஹோட்டலா?: முஸ்லிம்களை குறிவைக்கும் இனவாதம்
வரலாற்றுப் புகழ்மிக்க சிவனொளிபாத மலை இன்று சர்ச்சைக்குரிய பிரதேசமாக மாறியுள்ளது. மலைப் பிரதேசப் பகுதியில் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று ஹோட்டலொன்று நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக சர்ச்சைகள் கிளப்பி விடப்பட்டுள்ளன.
இந்த மலையில் சிவபெருமானுடைய பாதச் சுவடு பதிந்துள்ளதாக நம்பிக்கை வைத்துள்ள இந்துக்கள் இம்மலையை சிவனொளிபாதமலை என்றழைக்கிறார்கள். இதேவேளை முஸ்லிம்கள் இம்மலையில் ஆதம் (அலை) யின் பாதச்சுவடு பதிந்துள்ளதாக நம்பிக்கை வைத்து பாவா ஆதம் மலை என்றழைக்கிறார்கள்.
பெரும்பான்மை மக்களான பெளத்தர்கள் புத்தபெருமானின் பாதச்சுவடே அங்கு பதிந்துள்ளதாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதனால் அவர்கள் இம்மலையை ஸ்ரீபாதமலை (கண்ணியத்துக்குரிய பாதம் பதிந்த மலை) என்கிறார்கள்.
சேர்ரொபர்ட் நொக்ஸ் தனது புத்தகத்தில் விண்ணுலகில் இருந்து வந்த புத்தபெருமான் கால்பதித்ததாக குறிப்பிட்டுள்ளார். கௌதம புத்தர் 500 சீடர்களுடன் களனிக்கு வந்தபோது இம்மலையைத் தரிசித்து கால்பதித்ததாக பௌத்தர்கள் நம்பிக்கை வைத்து தமது புனித பிரதேசமாக கருதி இம்மலையை தரிசித்து வருகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் ஆதத்தின் சிகரம் என்ற பொருள்பட இம்மலையை Adams Peak என்றழைக்கிறார்கள். எமது இஸ்லாமிய வரலாறு ஆதம் (அலை) அவர்களைப் பற்றிய கதைகளைத் தெரிவித்துள்ளது.
ஆதம் (அலை), ஹவ்வா (அலை) இருவரும் சுவனலோகத்தில் இருந்தபோது இவர்கள் மீது பொறாமைப்பட்ட இறை சாபத்துக்குள்ளான இப்லீஸ் ஆதம் (அலை) யை வழிகெடுக்க எண்ணி சுவனத்தினுள் நுழைந்தான். ஆதம் (அலை) யை அணுகி தடுக்கப்பட்ட மரத்தின் கனியை அவர் உண்ண வைக்க முயற்சித்தான். ஆதம் (அலை) கனியை உண்ண மறுத்த போது இப்லீஸ் கனியை ஹவ்வா (அலை) புசிக்க வைத்தான். பின்பு ஹவ்வா (அலை) மூலம் ஆதம் (அலை) யும் கனியைச் சாப்பிட்டார். இதனால் கோபமுற்ற அல்லாஹ் அவர்கள் இருவரையும் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றினான்.
சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதம்(அலை) இலங்கையின் பாவா ஆதம் மலை உச்சியில் கால்பதித்து நீண்டகாலம் அழுது மன்றாடியதாக வரலாறு தெரிவிக்கிறது. பின்னர் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு இலங்கையிலிருந்து கால் நடையாக மக்கா சென்று அரபா மைதானத்தில் ஹவ்வா(அலை) யை சந்தித்தார். பின்பு இலங்கை திரும்பி வாழ்ந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.
மலையை அண்மித்த பகுதியில் ஹோட்டல்?
சிவனொளிபாத மலையை அண்மித்த பகுதியில் மத்தியகிழக்கு நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளரால் ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக சிலர் சமூகவலைத்தளங்களில் தமது எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர். சிவனொளிபாதமலை (ஸ்ரீபாத) பௌத்தர்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்களை அப்பகுதியில் ஹோட்டல் நிர்மாணம் என்ற போர்வையில் குடியமர்த்த முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சுமத்துகின்றனர்
பொதுபலசேனா அமைப்பும் ஊடக மாநாடொன்றினை நடத்தி பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது. ஹோட்டல் நிர்மாணப்பணிகளை உடன் நிறுத்தும் படியும் கோரியுள்ளது. பொதுபலசேனா ஹோட்டல் நிர்மாணம் தொடர்பாக சில விபரங்களையும் வெளியிட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பு வெளியிட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.சிவனொளிபாத மலையை அண்மித்த பகுதியில் மத்தியகிழக்கு நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளரால் ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக சிலர் சமூகவலைத்தளங்களில் தமது எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர். சிவனொளிபாதமலை (ஸ்ரீபாத) பௌத்தர்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்களை அப்பகுதியில் ஹோட்டல் நிர்மாணம் என்ற போர்வையில் குடியமர்த்த முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சுமத்துகின்றனர்
அம்பகமுவ பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட நல்ல தண்ணி பொலிஸ் பிரிவில் மரே கிராமசேவை பிரிவில் உள்ள பீக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்று நிர்மாணிப்பதற்காக தற்போது களஞ்சியசாலைகள் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் காணி 83 ஏக்கர் 2 ரூட் ஆகும். இந்த தோட்டத்தின் முகாமையாளராக வெலிமடையில் வசிக்கும் தில்சான் சேனாரத்ன கடமையாற்றுகிறார்.
இந்த தோட்டத்தின் உரிமை அபுதாபி நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு உள்ளது. Abudhabi Capital Group எனும் பெயரைக் கொண்டதாகும். இந்த நிறுவனம் Al Ain Properties எனும் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் காணிகள் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடிசலாட் நிறுவனத்துக்கு தொடர்பில்லை
சிவனொளிபாதமலை காணி விவகாரத்துடன் மத்தியகிழக்கு நாட்டு தொலைத் தொடர்பாடல் சேவை வழங்குநரான எடிசலாட் நிறுவனத்துக்கும் தொடர்பிருப்பதாகவும் அந்நிறுவனத்தின் சேவைகளைப் பகிஷ்கரிக்குமாறும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. இந்நிறுவனம் இதனை முற்றாக மறுத்துள்ளது. குறிப்பிட்ட ஹோட்டல் நிர்மாணிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிறுவனத்துக்கும் எடிசலாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை எனத் தெரிவித்துள்ளது.
சிவனொளிபாதமலை காணி விவகாரத்துடன் மத்தியகிழக்கு நாட்டு தொலைத் தொடர்பாடல் சேவை வழங்குநரான எடிசலாட் நிறுவனத்துக்கும் தொடர்பிருப்பதாகவும் அந்நிறுவனத்தின் சேவைகளைப் பகிஷ்கரிக்குமாறும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. இந்நிறுவனம் இதனை முற்றாக மறுத்துள்ளது. குறிப்பிட்ட ஹோட்டல் நிர்மாணிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிறுவனத்துக்கும் எடிசலாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை எனத் தெரிவித்துள்ளது.
குறித்த காணியைக் கொள்வனவு செய்ததாகக் கருதப்படும் சுயாதீன முதலீட்டாளர்கள் குழு ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
அவர்கள் இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் தொலைதொடர்பாடல் சேவைகளைப் பயன்படுத்துவதற்காக எடிசலாட் லங்காவிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கிணங்க சிவனொளிபாத மலையிலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தொலைவில் தற்காலிக வலையமைப்பு கோபுரம் ஒன்றை நிறுவி அதனூடாக அவர்களுக்கு தொலைதொடர்பாடல் சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மாத்திரமே எடிசலாட் மேற்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது.
நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சிவனொளிபாத மலையடிவாரத்தில் பாரியளவிலான உல்லாசப் பயணத்துறை ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக செய்திகள் பரவியதையடுத்து மக்களிடையே பாரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் ஹெலிகொப்டர் ஒன்றில் வந்திறங்கிய அரேபியர்கள் சிலர் அப்பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், செய்தி இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
சிவனொளிபாத மலையடிவாரத்தில் பாரியளவிலான உல்லாசப் பயணத்துறை ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக செய்திகள் பரவியதையடுத்து மக்களிடையே பாரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் ஹெலிகொப்டர் ஒன்றில் வந்திறங்கிய அரேபியர்கள் சிலர் அப்பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், செய்தி இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த அரபிகளே குறித்த பகுதிக்கு ஹெலிகொப்டரில் சென்று ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர் ‘மரே’ தோட்டத்திலே தரை இறங்கியுள்ளது.
இது நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்டதாகும். ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் தரையிறங்கிய பிரதேசம் பிரபல அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான காணியெனவும் அவர் அக்காணியை ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அமைச்சர் பாரிய ஹோட்டல் ஒன்றினை நிறுவவே காணியை கொள்வனவு செய்து அதை அரபு நாட்டவருக்கு விற்பனை செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
தற்போது ஹோட்டல் நிர்மாண ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்காகவே அரபு நாட்டவர்கள் இங்கு வருகை தருவதாகவும் கூறப்படுகிறது. தமிழர்களும் சிங்களவர்களும் பெருமளவில் வழிபட்டு வரும் இப்புனித பூமியின் வரலாற்றை இல்லாமற் செய்து புதிய வரலாற்றை உருவாக்கும் முகமாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
மவுசாகலை நீரேந்தும் பிரதேசத்தை அழிவுக்குட்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
சிவனொளிபாதமலை உச்சியிலிருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் மரே நீர்வீழ்ச்சியை அண்மித்ததாக இந்த ஹோட்டல் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பீக்பீல்ட் என்ற தனியார் தேயிலைத் தோட்டத்தில் தங்கும் விடுதியொன்று நிர்மாணிக்கப்படுவதற்காக அனுமதி பிரதேச சபையிடம் கோரப்பட்டிருந்தது.
அதற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியான முறையில் இருந்ததால் பிரதேச சபை அவ்விடுதியை அமைக்க அனுமதி வழங்கியதாக அம்பகமுவ பிரதேச சபையின் செயலாளர் ஏ.சரவணபவன் தெரிவித்துள்ளார். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
சிவனொளிபாத மலை விகாராதிபதி
சிவனொளிபாத மலை புனித பூமிக்குள் எந்தவோர் உல்லாசப் பயண ஹோட்டலொன்றும் நிர்மாணிக்கப்படமாட்டாதெனவும் சிவனொளிபாத மலையடிவாரத்திலே தங்கும் விடுதியொன்றினை அமைப்பதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்றும் சிவனொளிபாதமலை விகாராதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாத மலை புனித பூமிக்குள் எந்தவோர் உல்லாசப் பயண ஹோட்டலொன்றும் நிர்மாணிக்கப்படமாட்டாதெனவும் சிவனொளிபாத மலையடிவாரத்திலே தங்கும் விடுதியொன்றினை அமைப்பதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்றும் சிவனொளிபாதமலை விகாராதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
புனித பூமி பிரதேசத்துக்குள் ஹோட்டல் நிர்மாணிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அதனை நிர்மாணிக்க வேண்டாமென்று தடுப்பதற்குரிய அதிகாரம் தனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுபலசேனாவின் குற்றச்சாட்டு
ஹோட்டல் நிர்மாணம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றினை நடத்தியது மாநாட்டில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கண்டனங்களை வெளியிட்டதுடன் இதற்கு கடும் எதிர்ப்பினையும் வெளியிட்டார்.
ஹோட்டல் நிர்மாணம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றினை நடத்தியது மாநாட்டில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கண்டனங்களை வெளியிட்டதுடன் இதற்கு கடும் எதிர்ப்பினையும் வெளியிட்டார்.
அபுதாபி கெப்பிட்டல் குரூப் என்ற நிறுவனம் பீக்வீல் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக 83 ஏக்கர் 2 ரூட் காணியை கொள்வனவு செய்துள்ளது. தற்போது களஞ்சியசாலையும் விமானம் இறங்கு தளமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இங்கு ஹோட்டல் நிறுவப்பட்டால் அது எமது பௌத்த கலாசாரத்தையும் பௌத்த வரலாற்றையும் அழிவுக்குட்படுத்தும்.
சிவனொளிபாத மலையிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலே இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த ஹோட்டலுக்கு அரபிகள் வந்து தங்கி சிவனொளிபாதமலை கூரகலை போன்ற இடங்களைத் தரிசிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அரபு கலாசாரமும் அரபு குடியேற்றமும் உருவாகும். அதனால் இந்தத் திட்டத்துக்கு அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும்.
இந்த ஹோட்டல் நிர்மாணத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? எந்த நோக்கத்துக்காக சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அமைக்க வேண்டும்? அபுதாபி நிறுவனத்துடன் உடன்படிக்கைகள் செய்துகொண்டவர்கள் யார்?
இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்? என்பன பற்றி அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பைசர் முஸ்தபாவை கைது செய்க
மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் அரபிகள் இலங்கையில் காணி கொள்வனவு செய்து வருகிறார்கள். அபுதாபி, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு காணி கொள்வனவில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் பின்னணியில் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா இருக்கிறார். அவரை அரசாங்கம் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் அரபிகள் இலங்கையில் காணி கொள்வனவு செய்து வருகிறார்கள். அபுதாபி, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு காணி கொள்வனவில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் பின்னணியில் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா இருக்கிறார். அவரை அரசாங்கம் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.
முஸ்லிம் அமைச்சர்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் ஒட்டிக்கொள்கிறார்கள். அன்று மஹிந்தவுடன் இருந்தவர்கள் இன்று மைத்திரியின் மடியில் இருக்கிறார்கள். ஜே.வி.பி.ஆட்சியமைத்தாலும் அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள் என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கூரகலை புனிதபூமி, முகுது மகாவிகாரை பூமி, சோமாவதி பூமி, தலதாமாளிகை புனித பூமி, தெவனகல புனித பூமியை ஆக்கிரமித்துள்ள முஸ்லிம்கள் தற்போது ஸ்ரீபாத (சிவனொளிபாத மலை) புனித பிரதேசத்தையும் ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார்கள். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆய்வு
சிவனொளிபாத மலையடிவாரத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹோட்டல் தொடர்பில் கண்டறிவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த 31 ஆம் திகதி அப்பகுதிக்குச் சென்று ஆய்வுகளில் ஈடுபட்டது.
சிவனொளிபாத மலையடிவாரத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹோட்டல் தொடர்பில் கண்டறிவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த 31 ஆம் திகதி அப்பகுதிக்குச் சென்று ஆய்வுகளில் ஈடுபட்டது.
அம்பகமுவ பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட மவுசாகலை நீரேந்துப் பிரதேசத்தின் மரே தோட்டப்பகுதியில் அதிகாரிகள் குழு விசாரணைகளை நடத்தினார்கள். இத்திட்டம் காரணமாக சிவனொளிபாதமலை வனப் பிரதேசம் உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள பிரதேசம் சூழலியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளுமா என்று ஆராய்ந்தார்கள்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆய்வினையடுத்து சிவனொளிபாத மலைக்குச் செல்லும் பக்தர்களைக் கவரும் வகையில் நல்லதண்ணி பீக்பீல்ட் தோட்டத்தில் ஓய்வுவிடுதி (ஹோட்டல்) ஒன்றை நிர்மாணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள இடத்தைக் கண்காணித்ததன் பின்னரே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மவுசாகலை நீர்த்தேக்கத்துக்கு மேலாக மரே நீர்வீழ்ச்சிக்கு அண்மையில் உள்ள தோட்டத்துக்கு சொந்தமான ஓய்வு விடுதியொன்றை நிர்மாணிப்பதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்றாலும் இந்த தோட்டம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வலயத்துக்கு உட்பட்டது அல்ல என்று நல்லதண்ணி வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பௌத்த– முஸ்லிம் விரிசலை ஏற்படுத்த சதி
சிவனொளிபாத மலை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கும் விவகாரம் தொடர்பான விமர்சனங்கள் பெளத்த – முஸ்லிம் விரிசலை ஏற்படுத்துவதற்கான சதி முயற்சியென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிவனொளிபாத மலை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கும் விவகாரம் தொடர்பான விமர்சனங்கள் பெளத்த – முஸ்லிம் விரிசலை ஏற்படுத்துவதற்கான சதி முயற்சியென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிவனொளிபாதமலை வளாகத்தில் எந்தவிதமான கட்டடங்களும் நிர்மாணிக்கப்படவில்லை. எந்த ஹோட்டலும் நிர்மாணிக்கப்படவில்லை எனவும் இது பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கான பொய்ப் பிரசாரம் எனவும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாத மலை புனித பிரதேசம் 99 ஏக்கர்களைக் கொண்டதாகும். அப்பகுதிக்குச் செல்லும் வழியில் 88 ஏக்கர்களைக் கொண்ட தனியார் நிலம் ஒன்று இருக்கிறது. அதில் ஏற்கனவே இருந்த கட்டத்தை தற்போது விடுமுறை விடுதியாக மாற்றுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த கட்டட வேலைகளே தற்போது நடைபெறுகின்றன. அதிலும் சுற்றாடல் தொடர்பான ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக நாம் விசாரணைகளை நடத்தி வருகிறோம்.
மாறாக சிவனொளிபாத புனித தல வளாகத்தில் ஹோட்டல் அமைக்கப்படவில்லை. எனினும் ஒரு தரப்பினர் நாட்டில் மதவிரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருப்பினும் இந்த விவகாரத்தை இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பிடிக்கிறார்கள் என பெரும்பான்மை மக்களை திசை திருப்புவது கவலைக்குரியதாகும்.
குறித்த ஹோட்டல் நிர்மாணப் பணிகளில் முதலீடு செய்துள்ளவர்கள் வெளிநாட்டவர்களே அன்றி இலங்கை முஸ்லிம்கள் அல்ல. அபுதாபி வர்த்தகர்கள் இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியுடனேயே இதில் முதலிட்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன் அரசாங்கத்தின் உரிய அனுமதிகளையும் அவர்கள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அப் பகுதி விகாராதிபதியும் இந்த ஹோட்டல் புனித தல பகுதிக்குள் வரவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஹோட்டல் அமைவதால் இலங்கை முஸ்லிம்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. இங்கு வந்து ஹோட்டல் அமைக்குமாறு இந்த நாட்டு முஸ்லிம்கள் அபுதாபி வியாபாரிகளிடம் கோரிக்கை விடுக்கவுமில்லை.
இதனை அமைக்க வேண்டுமா இல்லையா என்பதை அரசாங்கமும் அதிகாரிகளுமே தீர்மானிக்க வேண்டும். தேவையில்லை என்றால் அதற்கான அனுமதியை அரசாங்கம் இரத்துச் செய்யலாம். இதனால் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை.
ஒரு வெளிநாட்டு வியாபார நிறுவனத்திற்கும் இலங்கையின் முதலீட்டாளர்கள் மற்றும் காணிச் சொந்தக்காரர்களுக்குமிடையிலான விவகாரத்தை இலங்கை முஸ்லிம்களினுடையதாக பூதாகரமாக்கி பெரும்பான்மை சிங்கள மக்களை தவறாக வழிநடாத்தும் வேலையை இந்த இனவாத சக்திகள் கைவிட வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்..

Comments
Post a Comment