முச்சக்கர வண்டி- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : மூவர் காயம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு, நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பகல் 12 மணியளவில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கர வண்டிச் சாரதியும் அதில் பயணித்தவர் உட்பட மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பெண் ஆகியோர்கள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்,

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

-அப்துல் கையூம்

Comments