குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கைமாறும் விமல் வீட்டின் மர்ம மரணம்!
விமல் வீரவன்சவின் வீட்டில் மரணமடைந்த லஹிரு திஸாநாயக்க என்ற இளைஞன் தொடர்பில் தற்போது வரையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக பல்வேறு வகையில் செய்திகள் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் குறித்த இளைஞரின் உடல் உறுப்புகள் அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் .
உடலை பரிசோதித்து பார்த்த மரண விசாரணை அதிகாரி பீ.டீ.கலகெதர, சடலத்தின் மூக்கில் இருந்து இரத்தம் வந்துள்ளதாகவும், அதனை யாரோ ஒருவர் துடைத்துள்ளதாகவும், வாயில் சளியுடனான திரவம் ஒன்று வெளியேறியுள்ளதாகவும், வித்தியாசமான முறையில் உதடுகள் உலர்வடைந்துள்ளதாகவும், சடலத்தின் கழுத்தின் வலது பக்கத்திலும், வட பகுதியின் பின் பகுதி தோள்பட்டையிலும், வயிற்றின் இரண்டு பகுதிகளிலும் நீள நிறத்திலான தாக்கப்பட்ட தழும்புகளும் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே இது கொலை என்பதற்கான பல்வேறு நம்பதகுந்த ஆதாரங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து பீ அறிக்கை ஊடாக கடுவெல நீதவானிடம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமையினுள் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Comments
Post a Comment