அமெரிக்காவின் முன்னாள் இலங்கைத் தூதுவர் விளக்கமறியல்!

ஐக்கிய அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்கிரமசூரியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜாலிய விக்கிரமசூரிய இன்று காலை அமெரிக்காவிலிருந்து,  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்த போது  நிதி குற்றபுலனாய்வு விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இலங்கை தூதரகத்துக்காக புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட பணத்தில் 66 இலட்சம் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Comments