ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கும் அடித்தது யோகம்!
28,000 ஆசிரியர்களுக்கு டெப் (TAB) வழங்குவதாகவும், இதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட 175,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் உயர்தரமான வகுப்பறை வசதிகளை வழங்குவதற்காக 6,500 மில்லியன் நிதி ஒதுக்குவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு உயர்தரத்திலிருந்து வெளியேறும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் கணினியை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
டெப் கணினி மற்றும் வை பை வசதிகளை ஏற்படுத்துவதற்காக தொலைபேசி நிறுவனங்களுக்கு நிதி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
5 வயது முதல் 19 வயது வரை 4.5 மில்லியன் மாணவர்களுக்கும் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதியொன்றையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்போது வைத்தியசாலைகளில் தங்கியிருந்து அல்லது வெளி நோயாளர் பிரிவுகளில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்காக வெளி சிகிச்சைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவும், உள்ளக சிகிச்சைகளுக்காக ஒரு லட்சம் ரூபாவும் காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

Comments
Post a Comment