துமிந்தவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கவில்லை!

சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பத்திரிக்கைகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் குடும்ப உறவினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

துமிந்த சில்வா தலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளானவர் எனவும் , அவருக்கு நிரந்தர சிகிச்சை தேவையென்றும் அவரது உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த தினத்தில் இடம்பெற்றதாவது, விளக்கமறியலில் வைக்கப்பட்ட துமிந்த சில்வாவின் நோய் நிலையை தீவிரமடைந்ததை தொடர்ந்து சிகிச்சைக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் ஶ்ரீ ஜயவர்தன புர மருத்துவமனையில் அழைத்துச்செல்லப்பட்டது மாத்திரமே என துமிந்தவின் சகோதரி துமிந்தவின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஶ்ரீ ஜயவர்தன புர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதற்கான காரணம் , அவர் துப்பாக்கிப்பிரயோகத்திற்கு உள்ளானதை தொடர்ந்து குறித்த மருத்துவமனையிலேயே இவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக குறித்த நோயாளரை மீண்டும் அதே மருத்துவனையின் மருத்துவரிடம் அழைத்துச்செல்வதே சிறந்தது என சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்ததை தொடர்ந்தே துமிந்த சில்வா ஶ்ரீ ஜயவர்தன மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே , துமிந்த சில்வாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளபடுவதாக பத்திரிக்கைகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை எனவும் , இது சிலரின் அரசியல் தேவைக்காக வேண்டுமென்றே பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் எவ்வித சிகிச்சைகளும் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இவ்வாறு சிகிச்சை வழங்கப்படாததற்கு காரணம் மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளமையினாலாகும் என ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் அதுல கஹந்தலியனகே குறிப்பிட்டிருந்தார்.

சிறையில் வைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் சகோதரி அவரின் பேஸ்புக் தளத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

Comments