மஹிந்தவின் சீன விஜயத்தின் பின்னணியில் ரணில்.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயத்தின் பின்னணியில்   பிரதமர் ரணில் விக்கரமசிங்கவே உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அளவுகடந்த அன்பும் அக்கறையும் உள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.  பசில் ராஜபக்ஷ விமல்  வீரவன்ச, உதய கம்மன்பிலவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான  நெருக்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலத்தை சீரழித்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Comments