டான் பிரியசாத் தொடர்ந்து விளக்கமறியலில்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “டான் பிரியசாத்” என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாதின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் டான் பிரியசாதுக்கு பிணை வழங்க எந்த வித ஆட்சேபனைகளும் இல்லை எனத் தெரிவித்தனர். அத்துடன் கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
என்றாலும் “டான் பிரியசாத்” சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை. அதன் காரணமாக குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதவான், “டான் பிரியசாத்” ஐ டிசம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கை நீதவானுடன் கலந்துரையாடி இன்றைய தினமே மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பிரதிவாதிகள் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதற்கு நீதவான் அனுமதி வழங்கவில்லை என அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்ன, சிராஸ் நூர்தீன் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தானர்.

Comments
Post a Comment