Skip to main content

இரு­வ­ருக்கு புதி­தாக அமைச்சுப் பத­விகள்.?


புதிய அமைச்­சர்கள் இருவர் இம் மாத இறு­திக்குள் சத்­தியப் பிர­மாணம் செய்­ய­வுள்­ள­தாக நம்­ப­க­ர­மான தகவல்கள் வெளியா கியுள்ளன.
இதே­வேளை அமைச்­ச­ர­வையில் சில அமைச்­சர்­களின் விட­ய­தா­னங்­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் அறி­ய­வ­ரு­கி­றது.  இது தொடர்­பாக மேலும் தெரிய வரு­வ­தா­வது,
நவம்பர் (இம்­மாதம்) 10 ஆம் திகதி நல்­லாட்­சியின் வரவு – செலவு திட்டம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்ட பின்னர் அமைச்­ச­ர­வையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படும் என அரசு ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தது. ஆனால் இவ்­வா­றான அமைச்­ச­ரவை மாற்­றங்கள் எத­னை யும் மேற்­கொள்ளப்போவ­தில்­லை­யென தற்­போது அரசு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக அறி­ய­வ­ரு­கி­றது.
ஆனால் புதி­தாக இரு­வ­ருக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச் சர்  பத­விகள் வழங்­கப்­ப­ட­வுள்ள­ தா­கவும். இவர்கள் இரு­வரும் இம்மாத இறு­திக்குள் ஜனா­தி­பதி முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து பத­வி­யேற்­க­வுள்­ள­தா­கவும் தெரியவருகிறது.
அத்தோடு அமைச்சரவையிலுள்ள இரண்டொரு அமைச்சர்களின் விடயதானங்களின் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதெனவும் தெரிய வருகிறது. 

Comments