கல்பிட்டி வைத்தியசாலையை தரமுயர்த்துமாறு ரிசாத் பதியுதீன் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில்
புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள பி தர வை்தியசாலையான கல்பிட்டி வைத்தியசாலையினை ஏ தர வைத்தியசாலையாக தர முயர்த்துவதன் அவசியம் தொடர்பில் சமூக ஆர்வாளரும்,புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனிடத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதாகமான பதிலினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா தெரிவித்துள்ளார்.
கல்பிட்டி வைத்தியசாலையின் பணிகள் மிகவும் முக்கியமானதாக உள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் இந்த வைத்தியசாலையினை நாடி வருவதாகவும் தற்போதுள்ள வைத்தியசாலையின் வசதிகள் போதுமானதாக இல்லை என அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து இவ்வைத்தியசாலையினை ஏ தரத்திற்கு தரமுயர்த்தி தருமாறு விடுத்த வேண்டுகோளையடுத்து அமைச்சரின் பணிப்புரைக்கமைய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு(MS/14/2015/B இலக்க 2016-10-27) ஆம் திகதி கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளார்.
அதன் படி வடமேல் மாகாண உதவி பணிப்பபாளர் வைத்தியர் கினீஸா அமரசிங்க அவர்களினால் 2016.11.11 ஆம் திகதி இடப்பட்டு புத்தளம் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் கல்பிடடி வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பிலான அறிக்கையினை தமக்கு சமர்ப்பிக்குமாறு அதில் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா மேலும் தெரிவித்துள்ளார்.
அதே வேளை புத்தளம் தள வைத்தியசாலையினை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் இரண்டாம் கட்ட பேச்சுக்கள் இடம் பெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Comments
Post a Comment