"தம்புள்ளை ஹைரியா பள்ளியவாசல்" முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மந்த கதி.
25 -01-2016 அஸ்கிரிய மகாநாயக்க தேரர் கலகம ஸ்ரீ ஹத்ததிஸ்ஸ வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் வசித்து வரும் மக்கள் தமக்குத் தேவையான காணி அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரை அவ்விடத்திலிருந்து வெளியேற வேண்டாமென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் கலகம ஸ்ரீ ஹத்ததிஸ்ஸ அம்மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ ஹத்ததிஸ்ஸ தேரர் தம்புள்ளை மெதவிகாரைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த வேளை தேரரை தம்புள்ளையில் காணி இழந்தோர் சங்கத் தலைவர் மஞ்சுள தயானந்த உட்பட காணி இழந்தோர்கள் சிலர் சந்தித்து கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலின் போதே குழுவினரிடம் தேரர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அந்த கலந்துரையாடலின் போது மகாநாயக்க தேரர் மேலும் குறிப்பிட்டதாவது,
நீண்ட காலமாகக் குடியிருக்கும் உங்களை நினைத்தவாறு அவ்விடத்திலிருந்து அகலுமாறு கட்டளையிட முடியாது.தேவையான காணி இனம் காணப்பட்ட பின்பே அவ்வாறு கோரிக்கை விடுக்க முடியும். நான் பதவியில் இருக்கும் வரை உங்களை எவராலும் நினைத்தவாறு அப்புறப்படுத்த முடியாது. இது தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளேன் என அவர் தெரிவித்திருந்தார்
பள்ளியை சூழவுள்ள 107 குடும்பங்களில் 86 குடும்பங்கள் நஷ்ட ஈடு வழங்குவதற்காக தம்புள்ளை பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 3 குடும்பங்களுக்கே நஷ்ட ஈட்டுத் தொகையாக தலா 2 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டனர். ஏனைய குடும்பங்கள் தமக்கான காணியை இனம் காட்டாமல் நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் என்று நிராகரித்தனர்.
நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட 3 குடும்பங்களில் ஒரு குடும்பம் நஷ்ட ஈட்டுத் தொகையை திருப்பி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்துள்ள இந்நிலையிலே தம்புள்ளை மெதவிகாரைக்கு விஜயம் செய்த அஸ்கிரிய பீடாதிபதியை பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சந்தித்துள்ளனர்.
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலுக்கும் பள்ளிவாசல் பிரதேசத்தில் தற்போது குடியிருக்கும் குடும்பங்களுக்கும் அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் தம்புள்ளை பொல்வத்தயில் காணிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி கொழும்பில் ஐ.நா.காரியாலயத்தில் RRT அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும்; ஐ.நா.நிபுணர் ரீட்டா ஐசாக் நதேயாவுக்குமிடையிலான சந்திப்பின்போது தம்புள்ளை பள்ளிவாசலின் சார்பில் அதன் நிர்வாக சபை உறுப்பினர் எம்.ஏ.ரஹ்மத்துல்லாஹ் கலந்து கொண்டு பள்ளிவாசல் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் பள்ளிவாசல் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்.
இதேவேளை 2012 ஆம் ஆண்டு பள்ளிவாசல் தாக்கப்பட்டதிலிருந்து பள்ளிவாசலைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் போராடி வருகிறோம். இதற்காக பல அரசியல் தலைவர்களை நாடியும் இதுவரை எதுவித பலனும் கிடைக்கவில்லை. அதனால் ஐக்கிய நாடுகள் சபை இதில் தலையிட்டு தீர்த்துத் தரவேண்டுமெனவும் கோரியிருந்தார்.
தம்புள்ளை பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்வதற்கு இதுவரை பொருத்தமான காணியொன்று வழங்கப்படவில்லை. நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இனங்காணப்பட்டுள்ள காணி மதுபானசாலைக்கு அருகில் அமைந்துள்ளதால் அக்காணிக்கு பள்ளிவாசல் நிர்வாகமும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை புதிதாக வேறோர் மாற்றிடத்தில் பள்ளிவாசலை அமைப்பதாயிருந்தால் 2 ஏக்கர் காணியும் தற்போது பள்ளிவாசலுக்கு அருகாமையில் வாழும் 17 குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான காணிகளும் வழங்கப்படவேண்டுமென பள்ளிவாசல் நிர்வாகம் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை தற்போது பள்ளிவாசலுக்கு அருகில் வாழும் குடும்பங்களுக்கு மிகவும் குறைந்த தொகை நஷ்டயீட்டினை வழங்கி அவர்களை அவ்விடத்திலிருந்தும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
பள்ளிவாசல் நிர்வாகம் அமைச்சர்களான கபீர்ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோரிடமும் முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளன.
முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மந்த கதியிலே செயற்படுவதால் ஐ.நா.நிபுணரின் தயவை நாடவேண்டியேற்றபட்டதாகவும் தெரிவித்தார்.
தம்புள்ளை புனிதபூமியில் முஸ்லிம்கள் புதிதாக பள்ளிவாசலொன்றை நிர்மாணிப்பதற்கு எதிராக தம்புள்ளையில் எதிர்வரும் 19ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் பாட்டம் தொடர்பான அழைப்புகள் சமூக வலைத்தளங்களிலும் முகநூலிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை சர்வதேச ரீதியாக பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள வேளை பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டு அதனை அகற்றுமாறு ஊர்வலம் செல்வது போன்ற நிகழ்வுகள் இந்த நாட்டை சிக்கலுக்குள் மாட்டக் காத்திருக்கும் சக்திகளுக்கு நாமே கதவைத் திறந்து கொடுப்பது போன்றதாக இருக்கும்.
தர்மத்தைப் பேணும் பள்ளிவாசல் ஒன்றுக்குக் கூட இந்த நாடு அங்கீகாரம் அளிக்க மறுக்கின்றது என்று பிரச்சாரம் செய்ய முற்படுவதற்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர இடமளிப்பதால் பிரச்சாரம் செய்வதற்கு நாமே வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
ஷீஆ,சியோனிச சக்திகளது கரங்கள் என்றுமில்லாதளவுக்கு இந்த நாட்டில் பலம் பெற்றுள்ள நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் இல்லை என்று நிராகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு சதியை முறியடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சதி பற்றிக் குறிப்பிடும் முஸ்லிம் தலைவர்கள் அரசினை வற்புறுத்த வேண்டும். ஏன் அவ்வாறு செய்யாதிருக்கிறார்கள்.
சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அரசை வலியுறுத்த வேண்டும்.
இந்த விடயங்களில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படாது மென்மைப் போக்கினை கடைப்பிடித்தால் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற இடமுண்டு. இது குறித்து அரசு விழிப்பாக இருக்க வேண்டும்.
உருவாகும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனை ஒத்திப்போடாது உடன் தீர்வு காண முற்பட வேண்டும். கடந்த ஒரு மாத காலத்துக்குள் கிண்ணியா,அம்பாறை,சம்பவங்களால் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் அதிர்ச்சியடைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் தனித் தனியாக சில நடவடிக்கைகளை எடுத்தாலும் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினைகளை எதிர் நோக்காதது குறித்து கவலை கொண்டுள்ளது. சமூகத்தின் இருப்போடு தொடர்பான விசயமாக இருப்பதனால் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்டுச் செயற்படுவது அவசியமாகும்.
பிரச்சினைகளை சிவில் தலைமைத்துவத் திற்கு விட்டு விட்டு முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒதுங்குகின்றதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
முஸ்லீம் சார்பான தொண்டு நிறுவனங்களுக்கு சிவில் தலைமைத்துவத்தின் பணி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களால் ஓர் எல்லைக்குத்தான் செல்ல முடியும். இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்டு இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருப்பதற்கு ஆக்கபூர்வமான சில செயற்பாடுகளை அரசு மூலம் செய்வதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.
அவ்வாறு தவறும் பட்சத்தில் தம்புள்ளை, குருநாகல், தெஹிவளை எனத் தொடரும் சம்பவங்களது பட்டியல் மேலும் நீடிக்க இடமுண்டு

Comments
Post a Comment