கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த இலங்கை தமிழர்
நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சக மாணவரை பொலிசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த தம்பதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே கோணாங்கிப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் பரமத்திவேலூர் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த 17 வயது மாணவனும் படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2ஆம் திகதி கல்லூரி சார்பில் எருமப்பட்டியில் நடத்தப்பட்ட முகாமிற்காக மாணவர், அந்த மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அன்று மாலை மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்து விட்டு இறுதியாக எருமப்பட்டி பொலிசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் பொலிசார் பரமத்திவேலூர் இலங்கை தமிழர் முகாமில் இருந்த மாணவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முகாமில் உள்ள நிஜந்தன்-பிரியா தம்பதியினர் வீட்டில் தங்க வைத்து மாணவியை, அந்த மாணவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மாணவரைக் கைது செய்த பொலிசார் அவரை சேலம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
மேலும், அடைக்கலம் கொடுத்த தம்பதியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
Post a Comment