வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கம்மன்பில!

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கடவுச் சீட்டு நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு அவர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் திருமண நிகழ்வு ஒன்றுக்கு இந்தியா செல்லவுள்ளதாகவும் மேலும் ஜப்பான் நாட்டில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றுக்கு செல்லவுள்ளதாகவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் உதய கம்மன்பில தனது சட்டத்தரணி மூலம் இன்று நீதிமன்றதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உதய கம்மன்பிலவின் கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து எதிர்வரும் 9 ஆம் திகதி பதிலளிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments