உண்மைகளை கக்கும் டக்ளஸ்!

இந்திய இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் மற்றும் ஈரோஸ் ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில், நாங்கள் நாட்டில் இருக்கவில்லை எனவும் தாங்கள் இந்தியாவில் இருந்ததாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments